
நமது கண் ஒரு கேமிராவைப் போன்று இயங்குகிறது. ஒளியின் உதவியுடன் ஒரு கேமிரா பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல, நமது கண்ணும் ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம்பிடித்து, மனதில் பதிவு செய்து, பின்பு அதை மூளையில் விருத்தி(டெவலப்) செய்கிறது. கண்ணின் அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து, ஒரு குழுவைப் போன்று இயங்கி நமக்குப் பார்வை அளிக்கிறது. இதில் ஃபிலிம் போன்றுள்ள ‘கார்னியா’(விழிப்படலம்) என்ற பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கருமையான ‘கண் மணி’க்குள் நுழையும் ஒளிக்கதிர்களை, ‘கார்னியா’ திசைதிருப்புகிறது. திசை திரும்பிய ஒளிக்கதிர் ‘கண்மணி’க்குப் பின்னால் உள்ள ‘லென்ஸ்’-ஐச் சென்றடைகிறது. இந்த ‘லென்ஸ்’ தனது உருவத்தை மாற்றிக் கொண்டு, தொலைவில் மற்றும் அருகில் உள்ள பொருட்களின் மீது ஒளிக்கதிர்களை ஒருமுனைப்படுத்துகிறது. இச்செயல் ‘அக்காமடேஷன்’ எனப்படுகிறது.
கேமிரா-வில் உள்ள ஃபிலிமைப் போன்று இயங்கும் ‘ரெடினா’-வில், ‘லென்ஸ்’ ஒரு தலைகீழ் உருவத்தைப் பதிக்கிறது. பதிக்கப்பட்ட உருவம், மின் விசைகளாக மூளைக்குள் செலுத்தப்பட்டு, அங்கு அவை விருத்தி(டெவலப்) செய்யப்படுகின்றன.
| View of an iris and pupil | View of tear ducts |
|---|---|
![]() |
![]() |