நமது கண்களுக்கு ஏற்படும் காயங்களில் குறைந்தபட்சம் 90% காயங்கள் தடுக்கப்படக்கூடியவை. அமெரிக்காவில், ஒற்றைக் கண்ணில் ஏற்படும் கண் பார்வையின்மைக்கு முதன்மைக் காரணம் கண்களில் ஏற்படும் காயங்களாகும்; இது உலகம் முழுவதும் கண் பார்வையின்மைக்கு இரண்டாம் காரணமாக விளங்குகிறது (முதற் காரணம் ‘காட்டராக்ட்’ ஆகும்). இக்காயங்கள் முப்பது வயதிற்குட்பட்ட நபர்களில், பெருவாரியாகக் காணப்படுகிறது(57%). கண் காயங்களுடைய நபர்களின் சராசரி வயது, 29 ஆகும்.
கண் காயங்களுக்கான முக்கிய காரணங்கள் - வீட்டில் பயன்படுத்தப்படும் ரஸாயனப் பொருட்கள், தொழிற்சாலைக் குப்பைகள், பாட்டரி அமிலம், விளையாட்டின் போது ஏற்படும் விபத்துகள், வாணவேடிக்கை, UV-கதிர்வீச்சுகளுக்குத் தம்மை அதிக அளவில் வெளிப்படுத்திக் கொள்வது, சரியான மேற்பார்வையின்றி வயதிற்குப் பொருந்தாத விளையாட்டு பொருட்களுடன் விளையாடுவது ஆகியவை. 20% கண் காயங்கள் தொழில் ரீதியாக ஏற்படுபவை; அவற்றுள் 95% காயங்கள் கட்டுமானப் பணியில் உள்ள ஆண்களுக்கு ஏற்படுகிறது.
‘தேசிய கண் நோய் தடுப்புச் சங்கம்’ (National Society to Prevent Blindness) ஏறத்தாழ 40,000 கண் காயங்கள் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு சம்பந்தப்பட்டவை என்று கூறுகிறது; ஆனால், உண்மையில் இது 100,000 ஆக இருக்கக்கூடும். 5 முதல் 14 வயது வரை உள்ளவர்களுக்கு ஏற்படும் விளையாட்டு சம்பந்தப்பட்ட காயங்களுக்கு முதன்மைக் காரணம் ‘பேஸ்பால்’. 15 முதல் 24 வயது வரை உள்ளவர்களுக்கு கூடைபந்து ஆட்டம் பரவலான காரணமாகிறது; விளையாட்டின் போது விரல்களும், முழங்கைகளும் கண்களில் படுவது காரணமாகும். இக்காயங்களால் பல விளையாட்டு வீரர்கள் தங்கள் தொழில்களைக் கைவிட நேர்ந்திருக்கிறது. பல விளையாட்டு வீரர்கள் கவசம் கொண்டு தங்கள் தலையையும், உடலையும் பாதுகாத்துக் கொண்டாலும், வெகு சிலரே தங்கள் கண்களைப் பாதுகாத்துக் கொள்கின்றனர்.
பெரும்பான்மையான விளையாட்டு சம்பந்தப்பட்ட காயங்கள், மன அதிர்ச்சி விளைவிக்கின்றன. காயம் ஏற்படுத்தும் பொருளின் அளவு, வேகம், கனம் ஆகியவற்றைப் பொறுத்து, கண்ணுக்கு ஏற்படும் பாதிப்பு அளவிடப்படுகிறது. இவற்றுள் சில - கண்குழி முறிவு, கண்குழி மற்றும் கண் இமை நசிவு, கருவிழியில் காயம், கருவிழி அதிர்வு, ரெடினாவில் ரத்தப்போக்கு, ரெடினாவில் பிரிவு, கண்ணீர், கண் நரம்பு பாதிப்பு ஆகியவை. கண்குழி முறிவின் அறிகுறிகள் - வீக்கம், ஊமைக்காயம், கண்களை அசைக்கும் போது ஏற்படும் வலி, சாதாரணமாக இரு உருவங்களாகத் தோன்றும் உருவம் - ஒரு கண்ணை மூடிக் கொண்டு பார்க்கும் போது சரியாகத் தோன்றுவது, மூக்கு சிந்தும் போது கண் இமை வீங்குவது ஆகியவை. கருவிழியில் ஏற்படும் காயத்தின் அறிகுறிகள் - பெருத்த வலி, கட்டுக்கடங்காத கண்ணீர் மற்றும் வெளிச்சத்தில் கண் கூசுதல் ஆகியவை. கண் நரம்பு பாதிக்கப்பட்டால், உடனடியாக கண் பார்வை இழப்பு ஏற்படுகிறது. ரெடினாவில் ஏற்படும் பிரிவின் அறிகுறிகள் - கண் பார்வையில் திடீரென்றோ அல்லது படிப்படியாகவோ சிறிய புள்ளிகள் அல்லது வலைகள் தோன்றுவது, கண்களில் திடீரெனத் மின்னல் தோன்றுவது போன்ற பிரமை, மற்றும் கண்பார்வையை மறைக்கும் திரை.
| Eye with Hyphaema (blood clot in anterior chamber) | Right iridodialysis from blunt trauma |
|---|---|
![]() |
![]() |
| Blunt trauma from a paintball | |
|---|---|
| Normal (pre-shooting) condition | Condition at time of shooting |
![]() |
![]() |
| Subsequent condition with post-traumatic cataract | Condition following lens replacement |
![]() |
![]() |
| Post accident condition | |
![]() | |
சாதாரணமாக இக்காயங்கள் கண்களை ஊடுருவி உள்ளே சென்று பாதிப்பு ஏற்படுத்துவது இல்லையென்றாலும், சில சமயங்களில் பெரிய ஆயுதங்கள் விட்டெறியப்படும் போது இது ஏற்படலாம். இந்த சமயங்களில் தோன்றும் காயங்கள் லேசான சிராய்ப்புகளாகவோ அல்லது பெரிய காயங்களாகவோ இருக்கலாம். கார்னியா அல்லது கண்குழியினுள் செல்லும் மரம், உலோகம் அல்லது பிளாஸ்டிக் துகள்கள், கண்குழியில் காயம் ஏற்படுத்துகின்றன. கண்ணுக்குள் எங்கு சென்று இவை பதிவாகியுள்ளன என்பதை பொருத்து அறிகுறிகள் மாறுபடும்; ஆயினும் சில பொதுவான அறிகுறிகள் - கண்ணீர், வலி, இரு உருவங்கள் தோன்றுதல், வெளிச்சத்தில் கண் கூசுதல், கண்ணில் எற்படும் நெருடல் ஆகியவை.
| Perforating eye injury | Penetrating injury - Iris prolapse |
|---|---|
![]() |
![]() |
Orbital foreign body injury occurs from anything that gets into the cornea or orbit of the eye, including small pieces of wood, metal, plastic. Symptoms depend on where the foreign body is embedded, but include tearing, pain, double vision, light sensitivity or feeling of something in eye.
| Subtarsal Foreign Body | Metal Corneal Foreign Body |
|---|---|
![]() |
![]() |
| Iron Foreign Body Embedded in the Vitreous | |
![]() |
தூசி போன்ற சிறிய பொருட்கள் கார்னியாவினுள் சென்று, கார்னியாவை சிராய்க்கும் போது காயம் ஏற்படுகிறது. இதன் அறிகுறிகள் - கண்ணில் நெருடல், கண்ணீர், மங்கலான பார்வை, கண் வலி, வெளிச்சத்தில் கண் கூசுதல், கண்ணைச் சுற்றியுள்ள தசைகளில் உண்டாகும் வெடுக்கென்ற இழுப்பு ஆகியவை.
| Corneal Laceration | Cutaway View Into Eyeball |
|---|---|
![]() |
![]() |
| Side View of Eyeball with Eyelids | |
![]() |
தண்ணீர் விளையாட்டுகள், பனிச்சறுக்கு, உலோகத் துண்டுகளை காய்ச்சி இணைத்து அடித்தல் (வெல்டிங்), தோல் பதனிடுதல் - ஆகியவற்றின் போது, நமது கண்கள் UV-கதிர்வீச்சிற்கு நீண்ட நேரம் வெளிப்படுத்தப்படுகிறது; இதன் விளைவாக கண்ணில் வெப்பக் காயங்கள் தோன்றுகின்றன. பரவலாகக் காணப்படும் இவ்வகைக் காயம் ‘UV-கெரடைடிஸ்’ ஆகும். இதன் அறிகுறிகள் - வலி, வெளிச்சத்தில் கண் கூசுதல், கண் சிவத்தல், கண்ணில் நெருடல் ஆகியவை. நீண்ட நேரம் சூரியனைப் பார்ப்பதால் ஏற்படுவது ‘சோலார் ரெடினோபதி’ எனப்படும். இதன் முக்கிய அறிகுறி கண்பார்வைக் குறைவு.
ரஸாயனப் பொருட்கள் கண்களுக்குள் தெறிக்கும் போது, காயம் ஏற்படுகிறது. இதன் அறிகுறிகள் வலி மற்றும் கண் எரிச்சல் ஆகும். கண்கள் சிவந்தும், கண் இமை வீங்கியும் காணப்படலாம்.
