யுனைட் ஃபார் ஸைட் உலக அளவில், கண் நலத்திற்காகப் பணிபுரியும் ஒரு 501©3 தொண்டு நிறுவனம். உலகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் நிறுவப்பட்ட 75 நிறுவனங்களில் சுமார் 2000 தொண்டர்களைக் கொண்டு, 'யுனைட் ஃபார் ஸைட்' கண் நோய்த் தடுப்பு, கண் பாதுகாப்பு போன்றவற்றின் மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க விழைகிறது.
தொண்டர்கள் 'யுனைட் ஃபார் ஸைட்'-ஆல் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றால், அவர்கள் இந்த 'ஆன்லைன் கண் நல கோர்ஸ்'-ஐ வெற்றிகரமாக முடிப்பது மிகவும் அவசியம். இந்த வலைத்தளத்தில் உள்ள தகவல்கள் தொண்டர்களின் பயிற்சிக்காக மட்டுமே ; இது மருத்துவ ஆலோசனையாக கருதப்படக் கூடாது. அதுபோலவே, தொண்டர்கள் மக்களுக்கு கண் பாதுகாப்பு பற்றி எடுத்துறைப்பார்களே தவிர, மருத்துவ ஆலோசனை வழங்குவதில்லை.
'யுனைட் ஃபார் ஸைட்' -ஆல் அங்கீகரிக்கப்பட்ட கண் நல பயிர்ச்சியாளர் ஆவதற்கு நீங்கள் ஒரு 'யுனைட் ஃபார் ஸைட்' சங்கத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும் ; மற்றும் இந்த 'ஆன்லைன் கண் நல கோர்ஸ்'-ஐ இறுதித்தேர்வில் 85% மதிப்பெண்களுடன் வெற்றிகரமாக முடிக்கவேண்டும். முதன்முறை தேர்வில் வெற்றி பெறவில்லையென்றால், மறு முறை முயற்சி செய்யலாம்.
உங்கள் சமுக மக்களுக்கு கண் நலத்தைப் பற்றி எடுத்துரைக்க, நீங்கள் ஒரு 'யுனைட் ஃபார் ஸைட்' சங்கத்தை நிறுவ விரும்பினால் இந்த மின்னஞ்சல் முகவரியில் ஜெனிஃபர் ஸ்டேபிள்-உடன் தொடர்பு கொண்டு விண்ணப்பப் படிவத்தைப் பெறலாம் JStaple@uniteforsight.org ். இச்சங்கத்தை நிறுவுவதற்கு முன்போ அல்லது அதற்குப் பிறகோ, நீங்கள் 'ஆன்லைன் கண் நல கோர்ைஸ' முடிக்கலாம். 'யுனைட் ஃபார் ஸைட்' கண் நல பயிர்சியாளர்கள் அனைவரின் பெயர்களும், 'யுனைட் ஃபார் ஸைட்' வலைத்தளத்தில் இடம்பெறும்.
முக்கியமான தகவல் :இந்த வலைத்தளத்தில் உள்ள தகவல்கள் தொண்டர்களின் பயிற்சிக்காக மட்டுமே ; இது மருத்துவ ஆலோசனையாக கருதப்படக் கூடாது. மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு பெறப்படும் மருத்துவ ஆலோசனையே சிறந்தது; முழுமையானது.