யுனைட் ஃபார் ஸைட்
கருப்புக்கண்ணாடியும் நோய்த்தடுப்பும்



கோர்ஸ் முதல் பக்கம்

நீண்டகாலமாக அல்லது தவறான முறையில் சூரிய ஒளிக்கதிர்களுக்கு நம்மை நாம் வெளிப்படுத்திக் கொள்வது, கண்களுக்கும் தோலுக்கும் தீங்கு விளைவிக்கும்.

A picture of sunglasses

சூரியனிலிருந்து வெளிப்படும் UVB-கதிர்வீச்சு கண்ணின் வெளிபாகங்களான கார்னியா, கஞ்சங்டிவா மற்றும் லென்ஸ் ஆகியவற்றை தாக்குகிறது; இதனால் கண்களில் எரிச்சல், வறட்சி, வீக்கம் அல்லது புண், வயதுக்கு மீறிய தோற்றம் ஆகியவை ஏற்படுகிறது. UVA-கதிர்வீச்சு கண்களுக்கு மட்டுமல்லாது, தோலுக்கும் கேடு விளைவிக்கிறது; இது கண்ணுக்குள் ஊடுருவி ரெட்டினா-வைத் தாக்குகிறது.

காட்டராக்ட் மற்றும் மேகுலாவின் சீர்கேடு, ஆகியவை சூரிய ஒளி தாக்கத்தினால் அதிக அளவில் ஏற்படும் கண் நோய்களாகும். தகுந்த பாதுகாப்பின்றி நீண்டகாலமாக சூரிய ஒளிக்கு வெளிப்படுத்திக்கொள்வது, இந்நோய் படிப்படியாக உருவாக காரணமாகிறது.